Donnerstag, Juni 30, 2005

இதழ்

பூவரசு

ஜேர்மனியிலிருந்து இருமாத இதழாக இந்துமகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு,பூவரசு கலை இலக்கியக் குழுவினரது வெளியீடாக வெளிவருகின்றது. ஆண்டுதோறும் கதை,கவிதை கட்டுரை ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தி பரிசளிக்கின்றனர்.

வெளியீடு: பூவரசு கலை இலக்கியப் பேரவை.
ஆசிரியர்: இந்துமகேஷ்

தொலைபேசி/ தொலைநகல்: 0421 / 5970822

மின்னஞ்சல்: poovarasu_Germany@hotmail.com

முகவரி:
Kultur und Literatur Organisation e.V Postfach 10 34 01 28034 Bremen Germany

தெரிதல்
அ.யேசுராசா அவர்களை ஆசிரியராகக் கொண்டு இருதிங்கள் இதழாக வெளிவருகிறது தெரிதல் கலை இலக்கிய இதழ்.இளைய தலைமுறைக்கான இதழ் என்ற மேற்கோளுடன் இளைஞர்களின் வரவை தமிழ் இலக்கிய உலகிலும் கலை உலகிலும் வரவேற்கும் இதழாக மிளிர்கிறது.

இலக்கிய விடயங்களை மட்டுமன்றி கலையம்சம் பொருந்திய நல்ல திரைப்படங்கள் பற்றிய அறிவையும் இளைஞர்கள் மத்தியில் ஊட்டும் அவாவுடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
விலை ரூபா 5.00(இலங்கை ரூபா)

தெரிதல் இதழைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது உங்கள் ஆக்கங்களை அனுப்பவோ தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

'தெரிதல்'
இலக்கம் 1, ஓடக்கரை வீதி,குருநகர்,
யாழ்ப்பாணம்
இலங்கை.
ஏகலைவன்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலிருந்து வெளிவருகிறது 'ஏகலைவன்' கலை இலக்கிய இதழ்.ஆசிரியர் இ.சு.முரளீதரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டும் பாடசாலையின் மாணவர்களையும் பிற ஆர்வலர்களையும் படைப்பாளிகளாகக் கொண்டும் இருதிங்களுக்கொருமுறை மலர்கிறது 'ஏகலைவன்'.

2004 இன் ஆரம்பத்தில் தனது ஆண்டுவிழா மலராக 78 பக்கங்களில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்துடனும் ஆக்கங்களுடனும் ஆறாவது இதழை வெளியிட்டது 'ஏகலைவன்' ஆசிரியர்குழு.

தொடர்புகளுக்கு

ஏகலைவன்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்
இலங்கை.

(Uduppiddi A.M.C
Uduppiddy
Jaffna,
Srilanka.)
அம்பலம்

நீண்ட கால இடைவெளியின் பின் மீண்டும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது அம்பலம் மாத இதழ்.இளைய தலைமுறையினரை ஆசிரியர்களாகக் கொண்டு அவர்களுக்காகவே வெளிவரும்

இதழ்.விலை:20

தொடர்புகளுக்கு
305,பலாலி வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
இலங்கை.
தூண்டி

சிறுகதை,கவிதை,கட்டுரை,நேர்காணல் பத்தி எனப் பல்வேறு ஆக்க இலக்கியக் கூறுகளுடன் காலாண்டிதழாக வெளிவருகிறது 'தூண்டி' இதழ்.

'தூண்டி' எனும் பெயரில் நூல் வெளியீடுகளையும் செய்து வருகிறார்கள்
வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களது நூல்கள் தூண்டி மூலம் பிரசுரமாகின்றன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் தி.செல்வமனோகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

காலாண்டிதழ் விலை ரூபா.40.00

தொடர்புகளுக்கு

'தூண்டி'
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்
இலங்கை

ஆத்மா

மனிதம் கலந்தாய்வுக் குழுவினரால் வெளிக்கொணரப் படுகிறது ஆத்மா சஞ்சிகை.

சமூக,அரசியல்,பண்பாட்டுத் தளங்களில் அனுபவம் சார்ந்து விமர்சனக் கருத்துகளைப் பரவலாக்கும் எளிமையான சஞ்சிகை.

இரண்டு ஆண்டுகளாக மனித விழுமியங்களைத் தாங்கி வெளிவருகிறது.

தொடர்புகளுக்கு
மனிதம் கலந்தாய்வுக் குழு.
இல.40.கோவில் வீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
புதிய தரிசனம்

இளம் தலைமுறையின் ஆக்க இலக்கியத்தின் இன்னொரு வரவு "புதிய தரிசனம"் மாத இதழ்.வதிரி கரவெட்டியைச் சேர்ந்த இளைஞர் குழுவினரால் வெளிக்கொண்ரப்படும் "புதிய தரிசனம்" இதழ் கதை,கவிதை,கட்டுரை மற்றும் பத்தி எழுத்துக்கள் என பல்சுவையுடன் வெளிவருகின்றது.
விலை 20/=

தொடர்புகளுக்கு:
"புதிய தரிசனம்"
அஜந்தகுமார்
வதிரி,கரவெட்டி

போது
போது (வைகாசி - ஆனி 2004)
ஆறாவது ஆண்டாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'போது' இருமாத இதழ்.கவிதை,சிறுகதை,கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் தாங்கி வெளிவருகின்றது.
ஆடி-ஆவணி மாத இதழ் 'போது' இதழின் ஆறாவது ஆண்டு மலராகும்.

விலை (இலங்கை ரூபா) 10.00

தொடர்புகளுக்கு
வாகரை வாணன்,
உளவளத்துணை நிலையம்,
இல. 1, யேசுசபை வீதி, மட்டக்களப்பு
யாழ்ப்பாணம்.
இலங்கை.

பெண்
தொகுதி:9, இல:1, 2004

தொடர்புகளுக்கு:
விஜயலட்சுமி சேகர்,
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,
மட்டக்களப்பு.
அறிவிசை
பா.துவாரகனை ஆசிரியராகக் கொண்டு தூண்டி வெளியீடாக வெளிவருகிறது 'அறிவிசை' காலாண்டிதழ்.அறிவியலுக்கு முதன்மை கொடுத்து பொது அறிவு கலை சார்ந்த விடயங்களையும் இணைத்து வழங்கும் இதழ்.மாணவர்களுக்கு நிறைந்த பயனுள்ள இதழ்.
தொடர்புகளுக்கு.

"அறிவிசை"
தூண்டி
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
இலங்கை.
காலம்

கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது 'காலம்' இதழ்.மார்ச் மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக 23 ஆவது இதழ் மலர்ந்துள்ளது.

காலத்தின் ஆரம்பகர்த்தா குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழ்

23 ஆவது இதழ்

காலம் இதழைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் tamilbooks at gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும்.



Thagavalkal - Eelanathan