Dienstag, September 16, 2008

பெண்கள் சந்திப்பு மலர்

பெண்கள் சந்திப்பு மலர் 1991 ம் ஆண்டிலிருந்து ஆண்டுமலராக வெளி வருகிறது. ஜெர்மனியில் நடைபெற்ற புகலிடப் பெண்கள் சந்தித்து தமது கருத்துக்களையும், பெண்களின் பிரச்சனைகளையும் பரிமாறும் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றிலேயே பெண்கள் சந்திப்புக்கென மலரொன்று வெளியிடுவது தீர்மானிக்கப் பட்டது. இத் தீர்மானத்தில் உருவானதே பெண்கள் சந்திப்பு மலர். பெண்கள் சந்திப்பு மலரில் உலகளாவிய ரீதியிலான தமிழ்ப்பெண்களின் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், பேட்டிகள், பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்ற மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், பெண்கள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் போன்றவை இடம் பிடிக்கின்றன.

மலர் வெளியீடு
பெண்கள் சந்திப்புக்கென [இதழ்கள்மலர்கள்] வெளியிடுவதெனத் தீர்மானிக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு பெண்கள் சந்திப்பின் போதும் மலர்களை வெளியிடுவது என்பது ஆரம்ப காலங்களில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 2008 வரையில் 27பெண்கள் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் 27 பெண்கள் சந்திப்பு மலர்கள் வெளியாகவில்லை. இலக்கியத் துறையில் பெண்கள் வெகுவாக ஈடுபட்டிருந்தாலும் குடும்பம், வேலை, குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள்... என்பவைகளைத் தாண்டி வந்து முழுமையான பங்களிப்பைச் செய்யவோ, இது விடயங்களில் அக்கறை காட்டவோ அந்தப் பெண்களால் முடியாமலே இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல தடைகளையும் தாண்டி வந்து தம்மாலான பங்களிப்புகளைப் பல பெண்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 200, 300 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு மலர் தற்போது 1000 பிரதிகள் வரை அச்சடிக்கப் படுகின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இப் பெண்கள் சந்திப்பு மலர் இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது குறிப்பிடத் தக்கது.

வெளிவந்த இதழ்கள்
பெண்கள் சந்திப்பு மலர் - 1
பெண்கள் சந்திப்பு மலர் - 2
பெண்கள் சந்திப்பு மலர் - 3
பெண்கள் சந்திப்பு மலர் - 4
பெண்கள் சந்திப்பு மலர் - 5
பெண்கள் சந்திப்பு மலர் - 6 (2001)
பெண்கள் சந்திப்பு மலர் - 7 (2002)
பெண்கள் சந்திப்பு மலர் - 8 (2004)
பெண்கள் சந்திப்பு மலர் - 9 (2005)

பெண்கள் சந்திப்பு மலர் - 6
பெண்கள் சந்திப்பு மலர் 2001

பெண்கள் சந்திப்பு மலர் - 7
மிகுந்த சர்ச்சைக்குள்ளான இம் மலர் 2002 இல் பால்வினைச் சிறப்பிதழாக வெளிவந்தது. 60 பக்கங்களைக் கொண்ட இம்மலரில் முழுமுழுக்க பால்வினை சம்பந்தமான, பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய விடயங்களே பேசப்பட்டன. அட்டைப்படமும், உள்ளடக்கமும் பெண்களால் கூட விமர்சிக்கப் பட்டன.

பெண்கள் சந்திப்பு மலர் - 8
பெண்கள் சந்திப்பு மலர் 2004இம்மலர் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புகளுடன் 2004 இல் வெளிவந்தது. வெவ்வேறு கோணங்களிலிருந்து எழுதப்பட்ட பத்தச் சிறுகதைகளும், ஆறு கட்டுரைகளும், 23க்கு மேற்பட்ட கவிதைகளும், ஓவியர் வாசுகியுடனான செவ்வியொன்றும் இதில் இடம் பெற்றுள்ளன. பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை. அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை, யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை இவை உணர்வோடு பேசுகின்றன.