Samstag, Juli 14, 2007

பெயல் மணக்கும் பொழுது

ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள்

பெயல் மணக்கும் பொழுது

ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள். - பெயல் மணக்கும் பொழுது

  • அம்புலி
  • அருட்கவிதா
  • அனார்
  • ஆகர்ஷியா
  • ஆதிரா
  • ஆதிலட்சுமி சிவகுமார்
  • ஆழியாள்
  • ஆமிரபாலி
  • இளநீதா
  • உமையாள்
  • உலகமங்கை
  • ஊர்வசி
  • ஔவை
  • கல்யாணி
  • கோ.சி.கலைக்கதிர்
  • கற்பகம்-யசோதா
  • கனிமொழி
  • அ.காந்தா
  • கிருஷாந்தி ரட்ணராஜா
  • குறவஞ்சி
  • கோசல்யா சொர்ணலிங்கம்
  • சங்கரி
  • தே.சங்கீதா
  • சத்தியா
  • சந்திரவதனா
  • சந்திரா இரவீந்திரன்
  • சன்மார்க்கா
  • சமர்விழி
  • சிரச்சீவி
  • சிவரமணி
  • சுகந்தினி சுதர்சன்
  • சுதாமதி
  • கே.சுதாஜினி
  • சுமதி ரூபன்
  • சுல்பிகா
  • சூரியநிலா
  • செந்தணல்
  • செவ்வதனி
  • செல்வி
  • தமிழவள்
  • தயாமதி
  • தயாநிதி
  • தர்மினி
  • தாட்சாயினி
  • தானியா
  • தில்லை
  • துர்க்கா
  • தூயவள்
  • நவஜோதி
  • நளாயினி
  • நஜீபா
  • நாமகள்
  • நிருபா
  • நிரோசா
  • நிலா
  • பர்வின்(நாச்சியார் தீவு)
  • பஹீமா ஜஹான்
  • பாமதி
  • பாமினி
  • மேஜர் பாரதி
  • பாணுபாரதி
  • பிரதீபா தில்லைநாதன்
  • பிரியதர்சினி
  • மசூறா ஏ.மஜிட்
  • மல்லிகா
  • மலைமகள்
  • மஸாஹிரா பாயிஸ்
  • மீரா பாலகணேசன்
  • முகைசிரா முகைடீன்
  • மைத்ரேயி
  • மைதிலி
  • யாழ் ஆதிரை
  • யாழினி
  • யூவியா
  • ரங்கா
  • ரஞ்சினி
  • ரேவதி
  • லறீனா ஏ.ஹக்
  • வசந்தி-ராஜா
  • இ.வசந்தி
  • வாசுகி குணரத்தினம்
  • காப்டன் வானதி
  • விண்ணரசி
  • வித்யா
  • வினோதினி
  • விஜயலட்சுமி சேகர்
  • விஜிகலா புவனேந்திரன்
  • றஞ்சனி
  • ஜமுனா
  • சா.ஜெயந்தி
  • ஜெயந்தி தளையசிங்கம்
  • லுணுகலை ஹஸீனா புஹார்

ஈரக் கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணில் இருந்து கசிவுகளை உடலிலும் மனத்திலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் இது.


1986 இல் வெளியான "சொல்லாதசேதிகள்" என்னும் கவிதைத்தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு பயணதில் இருபது ஆண்டுகளுக்குப்பின் 92 ஈழத்துப் பெண் கவிஞர்களின் ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இணையம் தவிர்த்து அச்சில் வெளியான ஆக்கங்களே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.


இத்தொகுப்பினை செய்தவர் அ.மங்கை அவர்கள், சென்னயில் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார், ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடன் உயர்வான தொடர்புகளைக் கொண்டிருப்பவர். மற்றைய பலரைப்போல் ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடனான தொடர்புகளை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர் அல்லர், உணர்வுபூர்வமாக ஒன்றித்து செயலாற்றுபவர்.

தொகுப்பாசிரியர் அ.மங்கை அவர்களின் அறிமுக உரையிலிருந்து சில பகுதிகள்.....


----// இத்தொகுப்பிற்காகத் தேடியலைந்தபோது எழும்பிய கேள்விகள் பல. மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை என்பதைத் தெரிந்தபோது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு, இப்படி ஒரு குரல் உண்டு எனத் தெரிந்தபோது, இதுபோன்ற வெளிப்பாடுகளின் தேவை, அவற்றை வெளியிடப் பெண் பெயர் தெரிவு செய்தமை போன்றவற்றை நாம் கட்டுடைக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது. ஆண்மை / பெண்மை கட்டமைப்புகளின் பின் தொழிற்படும் ஊகங்களைப் புரிந்து கொள்ள வேண்டியதாகிறது. கோவையில் இருந்து வெளிவந்துள்ள 21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகள் ஆய்வு கட்டுரைத் தொகுப்பில் ப.தமிழரசி என்பவருடைய கட்டுரை முழுக்க முழுக்க மாலிகாவின் கவிதைகளை பெண் கவிஞரின் குரல் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளதைக் காண நேர்ந்தது. இன்னமும்..... என்னுள் தயக்கங்கள் உள்ளன. இத்தொகுப்பில் இடம்பெறும் எவரேனும் ஆண் கவிஞர்களாக இருப்பாரோ என, முடிந்தவரை உறுதி செய்துள்ளேன். வ.ச.ஐ.ஜெயபாலன், ஐங்கரநேசன், சித்ரலேகா, ஆழியாள், சுமதி ரூபன், தெ.மதுசூதனன் ஆகியோர் இதற்குப் பேருதவி செய்தனர். அவர்களது பங்களிப்பின்றி இத்தொகுப்பை நிறைவு செய்வது சிரமமாக இருந்திருக்கும்.

இத்தொகுப்பில் இடம்பெறும் சிலரை நான் நேரில் அறிவேன். பலரை நான் அறிந்ததாக உணர்கிறேன். இன்னும் பலரைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். இவர்களுக்குள் ஒவ்வொருவரது ஆளுமை, சிந்தனை, அரசியல் தெரிவு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தொகுப்பில் அனைவரும் ஒரு சேர இருப்பதைக் குறித்து அக்கவிஞர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வெவ்வேறு அரசியல் சார்பும் சிந்தனையும் கொண்டவர்கள் என்ற வகையில் அது நியாயமானதும் கூட. ஆனால் தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழப் பெண் கவிஞர்களுக்கான கவிதைத் தொகுதி என்ற வகையில், அனைத்துத் தரப்பையும் இணைப்பது எனக்கு அவசியமாகப்பட்டது. அதைவிடக் கூடுதலாக வேறுபாடுகளை ஒருங்கே வைப்பது வளமான வாசிப்பிற்கு வழிகோலும் என்று நான் நம்புகிறேன். எனது அடிமன உந்துதலும் படைப்பாளிகளான இப்பெண்களோடு நான் நடத்தும் உரையாடலும் இதுவாகும். இதனை எனது தோழிகள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

இக்கவிதைகளை நான் எடுத்த தொகுதிகள், இதழ்கள், மலர்கள் குறித்த விவரத்தை ஒவ்வொரு கவிதையோடும் இணைத்துள்ளேன். தொகுதியாக்கத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய தரவுகள் அவை என்றும் கருதுகிறேன். இதன் மூலம் பெண்கள் என்ற ஒரே அடையாளத்தை மட்டுமின்றி, இப்பெண்களின் சார்புத் தன்மையும் செயல்களமும் வெளிப்படும் எனக் கருதுகிறேன். தரவுகளை ஏற்கனவே வெளிவந்த தொகுப்புகள் தராத காரணத்தால், மூலத்தோடு ஒப்பிடவும், விடுபட்ட / மாற்றப்பட்ட சொற்கள் / வரிகளைக் கண்டறியவும் வாய்பின்றிப் போகின்றது. அடிப்படை அச்சு அறமாக இதைக் கருதிச் செயல்பட வேண்டிய அவசியத்தை, தமிழகத்தில் இன்று வலியுறுத்த வேண்டிய தேவை உள்ளது.

இத்தொகுப்பு முறைமை கூடியவரை அனைத்து தரப்புப் பெண் குரல்களையும் ஒருசேரப் பதிவு செய்வது என்பதாகவே உள்ளது. கவிஞர்களை அகரவரிசையில் வெளியிடுவதன் மூலம் இந்த இருபதாண்டுக் காலச் சூழலுக்குள் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், முரண்கள் போன்றவற்றைக் கொண்டுவர இயலாமல் போனது. இலக்கியத்தின் அழகியல் அளவுகோல், தனிப்பட்ட இரசனை மட்டங்கள் போன்றவற்றை இதுபோன்ற தொகுதிக்குள் கொண்டுவர நான் விரும்பவில்லை. வாழ்வா / சாவா என்ற போராட்டத்தில் , மூச்சுவிடத் திணறும் சூழலில் வெளிவரும் இக்கவிதைகளைக் கூறுபோட்டு, கூவி விற்க நான் தயாராக இல்லை. அதற்கான மனம் என்னிடம் இல்லை.

இவற்றோடு இத்தொகுப்பைப் பற்றி நினைக்கும் போது எனக்குச் சில அச்சங்கள் ஏற்படுகின்றன. இதில் வந்துவிடக்கூடிய தவறுகள் எனது தூக்கத்தைக் குலைக்கின்றன. தயவு செய்து தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். //----


இக்கவிதைத் தொகுப்பினை சிவ செந்தில்நாதன் தனது மாற்று வெளியீட்டினூடாக பதிப்பித்துள்ளார். நூலின் பிரதிகள் வேண்டுவோர் நேரடியாக சிவ செந்தில்நாதனுடன் தொடர்புகொள்ளலாம்.


தொலைபேசி : +919382853646


இக்கவிதைத் தொகுப்பானது 280 பக்கங்களுடன் டெம்மி அளவு தாளில் நேர்த்தியான கட்டமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபா 130.00 ஆகும்



Quelle - http://viruba.blogspot.com/2007/06/blog-post.html